தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்…, 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த UP வாரியர்ஸ்!!
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் UP வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.
குறைந்த பணியிடங்களுக்கான TNPSC “குரூப் 1” தேர்வு., தேர்ச்சி பெற இது தேவை? மாஸ் அப்டேட்!!!
அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 45 ரன்களுக்கும், அமெலியா கெர் 39 ரன்களுக்கும் குவித்தனர். இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய UP வாரியர்ஸ் அணி, ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதிக் கட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் 20 ஓவரில் 118 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்…, 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த UP வாரியர்ஸ்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
