தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் சாய் கிஷோரை சுற்றி எழும் சர்ச்சை - ஒரு பார்வை
மும்பையில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அதாவது தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் எடுத்த ஒரு முடிவுதான் இத்தகைய படுதோல்விக்குக் காரணம் என்று தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் சுலக்‌ஷன் குல்கர்னி கேப்டன் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்ததுதான் பிரச்சனையாகியுள்ளது.
ஷர்துல் தாக்கூரின் அபாரமான முதல் இன்னிங்ஸ் அதிரடி சதத்தினாலும், பிற்பாடு அவரே தமிழ்நாடு அணியின் 2வது இன்னிங்சில் சாய் சுதர்ஷன் மற்றும் நாராயண் ஜெகதீசனை பெவிலியனுக்கு அனுப்பியதாலும் தமிழ்நாடு அணியின் சரிவுக்கும் காரணமாக இருந்தார். ஷர்துல் தாக்கூர் மட்டுமல்லாது கடைசி விக்கெட்டுக்காக இரு வீரர்களும் சாதனை படைத்த தனுஷ் கோடியன் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் மீண்டும் 88 ரன்களைச் சேர்த்தனர். இதில் தனுஷ் கோடியன் மீண்டும் ஒரு சதமெடுக்கும் வாய்ப்பு உண்டானது. ஆனால் வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டேயை வீழ்த்த 89 ரன்களில் கோடியன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

