Dhoni: `அண்ணன் வர்றார் வழிவிடு.... - சென்னை வந்தடைந்த தோனி; பயிற்சியை எப்போது தொடங்குவார்?
17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்த மாதம் 22-ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் சேப்பாக்கத்தில் மோதவிருக்கின்றன. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனி சற்று நேரத்திற்கு முன்பு சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.
வழக்கமாக ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னை வந்தடைந்து சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியைத் தொடங்குவதுதான் தோனியின் வழக்கம். ஆனால், இந்த முறை இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சீசன் தொடங்குவதற்கு 17 நாள்களுக்கு முன்புதான் தோனி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி வீட்டின் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்திருந்தது. அதில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துவிட்டு அங்கிருந்து அப்படியே நேராக சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். சமீபத்தில் தனது வின்டேஜ் ஹேர்ஸ்டைக்கு மாறியவர், பலரும் எதிர்பார்த்தபடியே தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கும் அதே ஹேர்ஸ்டைலில் வந்துள்ளார்.
MS Dhoni has left from Jamnagar! pic.twitter.com/4nYR3lyjX6
— (@StanMSD) March 5, 2024
தோனிக்கு முன்னதாக சென்னை அணியின் மேனேஜர் ரஸல் பிப்ரவரி 19-ம் தேதியே சென்னைக்கு வந்துவிட்டார். இங்கிருந்து வீரர்களின் பயணம், தங்குமிடம், பயிற்சி வசதிகள் என எல்லாவற்றையும் திட்டமிடத் தொடங்கினார். சில நாள்களுக்கு முன்பு ருத்துராஜ் கெய்க்வாட் உட்பட ஒரு சில வீரர்கள் சென்னை வந்து சேர்ந்திருந்தனர்.
View this post on InstagramA post shared by Chennai Super Kings (@chennaiipl)
தினசரி மாலையில் மின்னொளியில் சேப்பாக்கத்தில் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னை வந்து சேர்ந்திருக்கும் தோனி அடையாறில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பார். அங்கு அவரை வரவேற்கவும் தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நாளை முதல் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுபட அதிக வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு மேல் மைதானத்திற்கு வந்து 9 மணி வரை தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபடுவதுதான் தோனியின் திட்டமாக இருக்கும்.
விசில் அடிக்கத் தயாராகுங்க பாய்ஸ்!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

