IPL 2024.., வெற்றிக்காக புது ரூட்டை கையில் எடுத்த SRH அணி.., இந்தாண்டு இப்படி ஒரு மாற்றமா??

இந்திய அணி ஒரு பக்கம் சர்வதேச டெஸ்ட் தொடரில் மும்முரமாக விளையாடி வந்தாலும் இன்னொரு பக்கம் IPL  தொடர் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் IPL குறித்து அணி நிர்வாகம் ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கூட SRH அணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் IPL தொடரில் SRH அணியை ஆஸ்திரேலியா கேப்டன்  பட் பாட் கம்மின்ஸ் வழி நடத்த உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு காரணம் இந்த அணி கடந்த ஆண்டு சீசனில் சரியாக விளையாடாததே ஆகும். இதனால் இந்த ஆண்டு வெற்றி கோப்பையை சுவைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்று தான் இந்த கேப்டன் மாற்றம். 30 வயதான பாட் கம்மின்ஸ் சர்வதேச தொடர்களில் 61 டெஸ்ட், 88 ஒரு நாள், 52 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவ்வளவு திறமை வாய்ந்த இவர் இந்த IPL சீசனில் கண்டிப்பாக SRH அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த அணிக்கு கேப்டனாக மார்க்ரம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட திரிபுரா!!!

The post IPL 2024.., வெற்றிக்காக புது ரூட்டை கையில் எடுத்த SRH அணி.., இந்தாண்டு இப்படி ஒரு மாற்றமா?? appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.