WPL 2024: 3 வது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிடல்ஸ்.. பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்தி அசத்தல்!!

இந்தியாவில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மோதின. இதில், முதலில் விளையாடிய டெல்லி அணியில் பேட்ஸ்மேன்கள் அபாரமாக செயல்பட 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் குவித்தது. இதில் லேனிங் சிறப்பாக விளையாடி (55 ரன்கள்) அரை சதம் விளாசினார். குஜராத் சார்பில் மேக்னா சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி, ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதிக் கட்டத்தில் டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்று இத்தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்தது.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post WPL 2024: 3 வது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேபிடல்ஸ்.. பலம் வாய்ந்த குஜராத் அணியை வீழ்த்தி அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.