ISL 2024: மெரினாவில் மாஸ் காட்டிய சென்னை.. கடைசி நிமிடத்தில் எதிரணியை வீழ்த்தி அபாரம்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 10 வது சீசனுக்கான போட்டி நேற்று (பிப்ரவரி 3) சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியானது ஒடிசா அணிக்கு எதிராக விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் சென்னை வீரர் அங்கித் முகர்ஜி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்க.., மார்ச் 6 வரை தான் இதுக்கு டைம்.., தேர்வாணையம் அறிவிப்பு!!!

இதையடுத்து தொடங்கப்பட்ட  2வது பாதியில் ஒடிசா அணியின் நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் ஒரு கோலை நுழைத்தார். இதனால் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் சென்னை வீரர் ஜோர்டான் முர்ரே ஒரு கோல் அடிக்க, சென்னை அணியானது, 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுது.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post ISL 2024: மெரினாவில் மாஸ் காட்டிய சென்னை.. கடைசி நிமிடத்தில் எதிரணியை வீழ்த்தி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.