IPL 2024 | குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விபத்தில் சிக்கி காயம்
மும்பை: குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணி வீரர் ராபின் மின்ஸ் விபத்தில் சிக்கி காயமடைந்தார். ஐபிஎல் 2024 சீசனுக்கு ரூ.3.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் 21 வயதான ராபின் மின்ஸ்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான, ராபின் மின்ஸ் அண்மையில் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ராபின் மின்ஸ் காயமடைந்தார். காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராபின் மின்ஸ் நன்றாக இருப்பதாகவும், பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் மின்ஸின் தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

