WTC 2023-25 புள்ளி பட்டியல்: முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா.. வெளியான புள்ளிவிவரம்!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதை நாம் அறிவோம். இது ஒரு புறம் இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியானது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை தன்வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இதில் நியூசிலாந்து அணி 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 3வது இடத்திலும் உள்ளது. இதைத்தொடர்ந்து பங்களாதேஷ், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 4வது, 5வது, 6வது இடங்களில் உள்ளன.
Enewz Tamil WhatsApp Channel
The post WTC 2023-25 புள்ளி பட்டியல்: முதலிடத்திற்கு முன்னேறிய இந்தியா.. வெளியான புள்ளிவிவரம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

