ISL 2024: சொந்த மண்ணில் ஜொலித்த பெங்களூர்.. புள்ளிபட்டியலில் முன்னேறி அசத்தல்!!
இந்தியன் சூப்பர் லீக் தொடர் கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் 12 அணிகளுக்கு இடையே சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று (மார்ச் 2) பெங்களூர் அணியானது, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூருவில் போட்டியிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க மல்லுக்கட்டினர். ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றியே முடிந்தது.
இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், பெங்களூர் அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் 89 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதனால், ஆட்ட நேர முடிவில் பெங்களூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 21 புள்ளிகளுடன் மும்பை அணியானது 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
The post ISL 2024: சொந்த மண்ணில் ஜொலித்த பெங்களூர்.. புள்ளிபட்டியலில் முன்னேறி அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

