IPL 2024: லக்னோ அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இத்தொடரின் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்த பரபரப்பான சூழ்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஊழியர்கள் குறைக்கப்படலாம் என தகவல்கள் உலா வந்தன. அந்த வகையில் தற்போது வெளியான தகவலின் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் லான்ஸ் க்ளூசரை உதவி பயிற்சியாளராக நியமித்துள்ளது. மேலும் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் செயல்படுவார் என தெரிகிறது. லக்னோ அணி 2023 ஐபிஎல் தொடரில் 8 வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்து இடத்தும் குறிப்பிடத்தக்கது.
TET தேர்வர்களே.., தேர்வுக்கு தயாராக சிறந்த வழி இதோ.., அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!!
ஐபிஎல் 2024 இல் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸின் ஆதரவு ஊழியர்கள்:
கேப்டன் – கேஎல் ராகுல்.
துணை கேப்டன் – நிக்கோலஸ் பூரன்.
தலைமை பயிற்சியாளர் – ஜஸ்டின் லாங்கர்.
உதவி பயிற்சியாளர் – லான்ஸ் க்ளூஸனர்.
பந்துவீச்சு பயிற்சியாளர் – மோர்னே மோர்கல்.
பீல்டிங் பயிற்சியாளர் – ஜான்டி ரோட்ஸ்
ஸ்பின் பயிற்சியாளர் – பிரவின் தாம்பே.
தலைமை சாரணர் – எம்.எஸ்.கே.பிரசாத்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
The post IPL 2024: லக்னோ அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்? வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

