இந்தியன் சூப்பர் லீக்: அடி பணிந்த ஜாம்ஷெட்பூர் …, அசத்திய ஏடிகே மோகன் பகான் அணி!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 10 சீசன் இறுதிக்கட்ட லீக் சுற்றை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஜாம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவின் ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில், 6வது இடத்தில் இருக்கும் ஜாம்ஷெட்பூர் அணி, 2வது இடத்தில் உள்ள ஏடிகே மோகன் பகான் அணிக்கு ஈடுகொடுத்து விளையாடியது.அதன்படி ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஏடிகே மோகன் பகான் அணியின் டிமிட்ரி பெட்ராடோஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

இதன் மூலம் முதல் பாதி முடிவில் ஏடிகே மோகன் பகான்  அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதனை தொடர்ந்து 2வது பாதியில் ஆட்டத்தின் 68வது மற்றும் 80வது நிமிடங்களில் ஏடிகே மோகன் அணியின் ஜேசன் மற்றும் ஆர்மண்டோ தலா ஒரு கோலை பதிவு செய்தனர். இதன் காரணமாக இப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி பெற்றது .

Enewz Tamil WhatsApp Channel 

The post இந்தியன் சூப்பர் லீக்: அடி பணிந்த ஜாம்ஷெட்பூர் …, அசத்திய ஏடிகே மோகன் பகான் அணி!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.