சைகையால் சர்ச்சையில் சிக்கிய ரொனால்டோ.. போட்டியில் விளையாடவும் தடை.. முழு விவரம் உள்ளே!!
2024 சவுதி புரோ லீக் தொடரின் ROUND OF 16 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 29) நடைபெற்ற போட்டியில் அல் நாசர் மற்றும் அல் ஹஸ்ம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே அல் நாசர் அணி கோல் அடித்து சிறப்பாக விளையாடியனர். ஆனாலும் ஆட்டத்தின் இறுதியில் 4-4 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இப்போட்டிக்கு பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தது பெரும் சர்ச்சை உண்டாகி உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.., இவர்களுக்கு அகவிலைப்படி 4% உயரும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
அதாவது இந்த ஆட்டம் நிறைவடைந்த பிறகு ரொனால்டோ எதிரணி ரசிகர்களை நோக்கி செய்த சர்ச்சைக்குரிய செய்கையால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மதிப்பில் அவருக்கு சுமார் ரூபாய் 4.41 லட்சம் அபராதம் விதித்து சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
The post சைகையால் சர்ச்சையில் சிக்கிய ரொனால்டோ.. போட்டியில் விளையாடவும் தடை.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

