PKL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?? புனேரி பல்டன் அணிக்கு எதிராக ஹரியானா ஸ்டீலர்ஸ்!!

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 12 அணிகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்த தொடரில், புனேரி பல்டன்  மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பந்தரேஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. இதையடுத்து தபாங் டெல்லி,  குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது.

இதில், வெற்றி பெற்ற ஹரியானா மற்றும் பாட்னா அணிகள் அரையிறுதிக்கு சென்றன. இதையடுத்து நடந்த அரையிறுதி போட்டியில் புனேரி பல்டன் பாட்னாவையும், ஹரியானா ஸ்டீலர்ஸ் ஜெய்ப்பூரையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. எனவே இன்று நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியில்,ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக புனேரி பல்டன்  அணி மோத உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்: வருகிற மே 1ஆம் தேதி முதல் ரயில் சேவை கிடையாது., மத்திய அரசுக்கு எச்சரிக்கை!!!

PKL லீக் தொடரில், இந்த இரு அணிகளும் 2 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர். இதனால், இந்த PKL லின் 10வது கோப்பையை யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அஸ்லாம் இனாம்தார் தலைமையிலான புனேரி பல்டன் அணி இந்த PKL தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து ரசிகர்களை கவர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

The post PKL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?? புனேரி பல்டன் அணிக்கு எதிராக ஹரியானா ஸ்டீலர்ஸ்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.