தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையவில்லை; தரம்சாலா போட்டியிலும் கே.எல்.ராகுல் விலகுகிறார்

புதுடெல்லி: தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கே.எல்.ராகுல், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதன் பின்னர் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் பேட்டிங் செய்யும் போது கே.எல்.ராகுலுக்கு தொடை பகுதியில் வலி ஏற்படுவதுதான். காயம் முழுமையாக குணமடையாத நிலையில் இதுதொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதற்காக கே.எல்.ராகுல் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.