வெற்றி பாதையில் RCB…, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

மகளிர் பிரிமியர் லீக் தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய  லீக் போட்டியில்  குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில், டாஸ் வென்ற RCB அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது, RCBயின் மோலினக்ஸ் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

தமிழக வாகன ஓட்டிகளே., ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கான புதிய நடைமுறை., இன்று (பிப்.28) முதல் அமல்!!!

இதனால், குஜராத்  அணியானது 20 ஓவர் முடிவில் 107 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில், அதிகபட்சமாக ஹேமலதா 31 ரன்களை எடுத்திருந்தார். இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற எளிய இலக்கை துரத்த RCB அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை சோஃபி டெவின் வந்த வேகத்தில் 6 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றத்தை தந்தார். ஆனால், அந்த அணியின் கேப்டனான மந்தனா பொறுப்புடன் விளையாடி, 12.3 ஓவரிலேயே இலக்கை அடைந்து இந்த WPLலில் 2வது வெற்றியை பெற்றுத்தந்தார். இதில், RCB சார்பாக, சப்பினேனி மேகனா 36, எல்லிஸ் பெர்ரி 26 ரன்கள் எடுத்து RCB அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

டெலிக்ராம்:  Enewz Tamil டெலிக்ராம்

The post வெற்றி பாதையில் RCB…, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.