ISL 2024: அந்நிய மண்ணில் அசத்திய பஞ்சாப்…, ஐதராபாத் அணிக்கு எதிராக கோல் மழை!!

இந்தியன் சூப்பர் லீக் தொடர் 12 அணிகளுக்கு இடையே கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இந்த வகையில், நேற்று (பிப்ரவரி 26) ஐதராபாத் அணியானது பஞ்சாப் FC அணியை எதிர்த்து போட்டியிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 45 வது நிமிடத்தில் பஞ்சாப் வீரர் லூக்கா கோல் ஒன்றை அடித்து அசத்தினார்.

வெற்றி பாதையில் RCB…, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

இதன் மூலம் முதல் பாதி முடிவில் 1-0 என்ற கணக்கில் பஞ்சாப் அணி முன்னிலை பெற்றது.  இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் பஞ்சாப் வீரர் மைதீன் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து ஐதராபாத் வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக பஞ்சாப்  அணி 2-0 என்ற கோல் கணக்கில்  ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post ISL 2024: அந்நிய மண்ணில் அசத்திய பஞ்சாப்…, ஐதராபாத் அணிக்கு எதிராக கோல் மழை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.