IND vs ENG 4th Test: அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் .. இந்தியா நிதான பேட்டிங்.!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சி மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்து இருந்தது. இந்த நிலையில் 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய வீரர் ஜடேஜாவின் சுழலில் சிக்கி 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
காவல் துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து., அதிர்ச்சியில் தேர்வர்கள்? பகீர் அறிவிப்பை வெளியிட்ட உ.பி. அரசு!!!
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட (73 ரன்கள்) அரை சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 2 ஆம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இதில், துருவ் ஜூரல் 30*, குல்தீப் யாதவ் 17* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 134 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

டெலிக்ராம்:  Enewz Tamil டெலிக்ராம்

The post IND vs ENG 4th Test: அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் .. இந்தியா நிதான பேட்டிங்.! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.