NZ vs AUS | டி20 தொடரை வென்றது ஆஸி.

ஆக்லாந்து: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 174 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 22 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித் 11, கேப்டன் மிட்செல் மார்ஷ் 26, கிளென் மேக்ஸ்வெல் 6, ஜோஷ் இங்லிஷ் 5, டிம் டேவிட் 17, மேத்யூ வேட் 1, பாட் கம்மின்ஸ் 28, நேதன் எலிஸ் 11, ஆடம் ஜாம்பா 1 ரன் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 4 விக்கெட்களையும் ஆடம் மில்னே, பென் சீயர்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.