NZ vs AUS 2024: 70 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.. தோல்வியின் பிடியில் நியூசிலாந்து!!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 68 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன்பிறகு வந்த கிளென் பிலிப்ஸ் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுப்பாக விளையாடி அசத்தினார். இதை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட தவறியதால் நியூசிலாந்து அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
Enewz Tamil WhatsApp Channel
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவத்தில் கேக்., உலக சாதனை படைக்குமா?
The post NZ vs AUS 2024: 70 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.. தோல்வியின் பிடியில் நியூசிலாந்து!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

