Yashasvi Jaiswal: `என் மகனின் வளர்ச்சிக்கு இவர்தான் காரணம்! - யாஷஸ்வி ஜெய்ஷ்வாலின் தந்தை

இந்தியா- இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி  வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் நடைபெற்று முடிந்த  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 236 பந்துகளில் 12 சிக்ஸர்களை  விளாசி பல்வேறு  சாதனைகளைப் படைத்திருந்தார். இந்நிலையில் ஜெய்ஷ்வால் வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை அவரின் தந்தை பகிர்ந்திருக்கிறார்.

யாஷஸ்வி ஜெய்ஷ்வால்

இதுகுறித்துப் பேசிய அவர் “  யாஷஸ்வியுடன் அவரின் பயிற்சியாளர் ஷூபினும் கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் யாஷஸ்விக்கு நிறைய பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். யாஷஸ்வி மைதானத்திலேயே சுருண்டு விழும் வரைக்கும் அவர் விடமாட்டார். தொடர்ந்து பயிற்சிகளை வழங்கிக் கொண்டே இருப்பார். அவரால்தான் யாஷஸ்வி இந்த உயரத்தை எட்டியிருக்கிறார். ஒட்டுமொத்த குடும்பமும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறோம். என யாஷஸ்வியின் தந்தை கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.