NZ vs AUS 2024: கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி!!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சன் ரவீந்திர 68 ரன்கள் விளாசினார்.
தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.., மீண்டும் பேச்சுவார்த்தையில் மத்திய அரசு.., சுமூக முடிவு கிடைக்குமா??
இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 32 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அதன்பிறகு மிட்செல் மார்ஷ் , ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் விளாசினார். இதை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டியதால் 20 ஓவர் முடிவில் 216 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வைக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post NZ vs AUS 2024: கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

