ராஜ்கோட் டெஸ்ட் | ஜெய்ஸ்வால், கில் மீண்டும் அபாரம்: 3-ம் நாள் முடிவில் இந்தியா 322 ரன்கள் முன்னிலை
ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆட்டமிழந்துது. நேற்று இந்திய அணி 445 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இறங்கியது. பென் டக்கெட்டின் அதிரடி சதத்தால் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அதிரடியான தொடக்கம் கொடுத்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

