இங்கிலாந்து அணியை வேகத்தில் மிரட்டிய முகமது சிராஜ்…, சாதனைகளை குவித்து அசத்தல்!! 

சர்வதேச இந்திய அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது 3 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தனது முதல் இன்னிங்கிஸை விளையாடிய இந்திய அணி 445 ரன்கள் குவித்திருந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது.

ஆனால், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கினார். இதனால், இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். டெஸ்டில் 70 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 68 விக்கெட்டுகள் மற்றும் டி20யில் 12 விக்கெட்டுகள் என 76 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் இந்த மாணவர்களுக்கு ஜாக்பாட்., ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

The post இங்கிலாந்து அணியை வேகத்தில் மிரட்டிய முகமது சிராஜ்…, சாதனைகளை குவித்து அசத்தல்!!  appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.