உருவக்கேலி செய்த நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பும்ரா மனைவி!

மும்பை: உருவக்கேலி செய்த வலைதளவாசிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் பதிலளித்த விதம் கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மொத்தம் 165 சர்வதேச போட்டிகளில் பும்ரா விளையாடி உள்ளார். மொத்தமாக 323 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அண்மையில் காயத்தில் இருந்து மீண்ட அவர், இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். 29 வயதான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கடந்த 2021-ல் தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.