கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகும் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!

 

இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஹைதராபாதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளரான ஜாக் லீச்சுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

இதையும் படிக்க:  சர்வதேச டி20 போட்டிகளில் 5-வது முறையாக சதம் விளாசிய மேக்ஸ்வெல்: மே.இ.தீவுகளுக்கு 242 ரன்கள் இலக்கு!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: அடுத்த 24 மணி நேரத்தில் அபு தாபியில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானத்தில் ஜாக் லீச் நாடு திரும்புவார். மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி ராஜ்கோட்டில் உள்ளது. இங்கிலாந்து மருத்துவக் குழு ஜாக் லீச்சின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:  12-வது முறையாக அடிக்கப்பட்ட இரட்டை சதம்; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

ஜாக் லீச்சுக்குப் பதிலாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணி டாம் ஹார்ட்லி, ரிஹான் அகமது மற்றும் சோயிப் பஷீர் ஆகிய மூன்று பிரதான சுழற்பந்துவீச்சாளர்களுடன் மீதமுள்ள போட்டிகளில் களம் காண உள்ளது. நான்காவது சுழற்பந்துவீச்சாளர் தெரிவாக ஜோ ரூட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.