ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

புவனேஷ்வர்: சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் புரோ ஹாக்கி லீக் தொடரில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. 7-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து 20-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி அசத்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என வலுவான முன்னிலையில் இருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.