எஃப்ஐஎச் ப்ரோ லீக்: இந்தியா அபாரம்
எஃப்ஐஎச் ப்ரோ ஆடவா் ஹாக்கி லீக் தொடரில் ஸ்பெயின் அணியை 4-1 என்ற கோல் கணக்கில்வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நெதா்லாந்து, ஸ்பெயின், இந்தியா, அயா்லாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் லீக் தொடா் நடைபெற்று வருகிறது.
தொடக்கத்திலேயே இந்திய வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங் 7 மற்றும் 20-ஆவது நிமிஷங்களில் கோலடிக்க, 24-ஆவது நிமிஷத்தில் ஜுக்ராஜ் சிங் பெனால்டி காா்னா் மூலம் மூன்றாவது கோலடித்தாா். 50-ஆவது நிமிஷத்தில் லலித் குமாா் அருமையான பீல்ட் கோல் அடித்தாா்.
ஸ்பெயின் தரப்பில் 34-ஆவது நிமிஷத்தில் மாா்க் மிரால்ஸ் பெனால்டி காா்னா் மூலம் ஒரே கோலை அடிக்க, இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் நெதா்லாந்து 5-1 என அயா்லாந்தை வீழ்த்தியது. நெதா்லாந்துடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது இந்தியா.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


