வாழ்த்தியவர்களை விமர்சித்த பும்ரா!

 

ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இதற்கு முன்பாக பும்ராவின் அதிகபட்ச ஐசிசி தரவரிசை 3வது இடம்.  

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி 9 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:  முதலிடம் பிடித்த நியூசிலாந்து: 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா! 

ஒரு இந்திய வேகப் பந்து வீச்சாளர் டெஸ்ட்டில் முதலிடம் பிடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து வடிவிலான கிரிக்கெடிலும் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

இதையும் படிக்க:  டிஎன்பிஎல் 2024 தொடா்: சாய் கிஷோா், சஞ்சய் யாதவ் அதிக தொகைக்கு ஏலம்

பிரபல இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் யார்க்கர்கள் அடங்கிய விடியோவை வெளியிட்டு ஐசிசி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பும்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரச்னையின்போது ஆதரவு அளிப்பவர்கள் யாருமில்லை. ஆனால் வாழ்த்தும்போது மட்டும் கூட்டமாக இருப்பார்கள் எனும் மீம்ஸை பகிர்ந்துள்ளார். இது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. சிலர் பும்ரா கூறியது உண்மையெனவும் கூறி வருகிறார்கள். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.