பழைய நண்பரை மறக்காத தோனி: வைரலாகும் புகைப்படம்!

 

முன்னாள் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2020ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசியின் முக்கியமான 3 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். அவரது சாதனைகளை இதுவரை எந்த இந்திய கேப்டனும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியின் தலைமையில் வென்றது. தற்போது, ஐபிஎல் மினி ஏலம் டிச.19இல் தொடங்க உள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

இதையும் படிக்க:  வாழ்த்தியவர்களை விமர்சித்த பும்ரா!

சமூக ஊடங்கங்களில் ஆக்டிவாக இல்லாத தோனி எப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருப்பார். 

இந்நிலையில் எம்.எஸ்.தோனி ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி செய்யும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் தோனி பயன்படுத்திய பேட்டில் ப்ரைம் என ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது. இந்தக் கடை அவரது பழைய நண்பருடைய கடை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:  டிஎன்பிஎல் 2024 தொடா்: சாய் கிஷோா், சஞ்சய் யாதவ் அதிக தொகைக்கு ஏலம்

தோனியின் வாழ்க்கை வரலாற்று கதையில் அவர் பிரபலாமாகதபோது இருந்து அவரை ஊக்கப்படுத்திய பழைய நண்பர்கள் பற்றி வரும். தோனியும் எப்போதும் பழைய நண்பர்களை சந்திப்பதை அடிக்கடி பார்க்க முடியும். 

இந்நிலையில் வலைப்பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு பலரும், “பழையதை மறக்காத தோனி” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

#MSDhoni #IPL2024 pic.twitter.com/g9fFQ0gnb0

— Chakri Dhoni (@ChakriDhoni17) February 7, 2024

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.