இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா…, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 3வது சீசனில் சர்வதேச இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்த்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது போட்டியை இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தி உள்ளது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் முன்னேறி உள்ளது.
அதாவது, 43.33%த்துடன்  5வது இடத்தில் இருந்த இந்திய அணி 52.77% 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 55%த்துடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 50%, நியூசிலாந்து 50%, பங்களாதேஷ் 50%-த்துடன் 3, 4 மற்றும் 5 வது இடங்களில் உள்ளனர். மேலும், பாகிஸ்தான் 36.66%, வெஸ்ட் இண்டீஸ் 33.33%, இங்கிலாந்து 25%, இலங்கை புள்ளிகள் எதுவும் இன்றியும் கடைசி 4 இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TET தேர்வுக்கு தயாராகும் தமிழக ஆசிரியர்களே…, உங்களுக்கான சிறந்த பயிற்சி மையம்…, யூஸ் பண்ணிக்கோங்க!! 

The post இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா…, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.