IND vs ENG 2024: டெஸ்ட் அரங்கில் மாபெரும் சாதனை படைத்த பும்ரா…, வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சாதனை ஒன்றை படைத்து உள்ளார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பவுலர் என்ற பெருமையை பெற்றுள்ளார். எதிர்வரும் போட்டிகளிலும் இதை பார்மை தொடர்வார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
The post IND vs ENG 2024: டெஸ்ட் அரங்கில் மாபெரும் சாதனை படைத்த பும்ரா…, வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


