T20 உலக கோப்பை 2024: விரைவில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல்…, வெளியான மாஸ் அப்டேட்!!
ஐசிசி சார்பாக நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைத் தொடரின் 9 வது சீசன் நடப்பு ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் பங்கு பெற உள்ள இந்த தொடரானது, வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 20 அணிகள், 4 குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு முதலில் லீக் சுற்றுகள் போல் மோத உள்ளன.
புற்றுநோயால் உயிரிழந்த பூனம் பாண்டே., உயிருடன் தான் இருக்கிறாரா?? லீக்கான ஷாக்கிங் அப்டேட்!!
இந்த லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த சூப்பர் 8 சுற்றுகள் ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரையிலும், அரையிறுதி போட்டிகள் ஜூன் 27 ஆம் தேதியும் இறுதிப் போட்டிகள் ஜூன் 29ம் தேதியும் நடைபெற உள்ளது. இதில், இந்திய அணியானது கனடா (CAN), அயர்லாந்து (IRE), பாகிஸ்தான் (PAK) மற்றும் அமெரிக்கா (USA) ஆகிய அணிகளுடன் குரூப் A யில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணிகளுக்கான லீக் போட்டிகள் முறையை,
- ஜூன் 5ஆம் தேதி IND vs IRE
- ஜூன் 9ஆம் தேதி IND vs PAK
- ஜூன் 12ஆம் தேதி IND vs USA
- ஜூன் 15 ஆம் தேதி IND vs CAN
இந்திய போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post T20 உலக கோப்பை 2024: விரைவில் இந்தியா VS பாகிஸ்தான் மோதல்…, வெளியான மாஸ் அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


