அகில் சோரனுக்கு வெண்கலம்
எகிப்தில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலின் கடைசி நாளான புதன்கிழமை, இந்தியாவின் அகில் சோரன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் பிரிவில் களம் கண்ட அவா், 8 போ் கொண்ட இறுதிச்சுற்றில் 451.8 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தாா். செக் குடியரசின் ஜிரி பிரிவ்ரட்ஸ்கி 462.9 புள்ளிகளுடன் முதலிடமும், பிரான்ஸின் ருமெய்ன் அஃப்ரொ் 460.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.
இந்தியா முதலிடம்: போட்டியின் நிறைவில் இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


