சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் இங்கிலாந்து அணிக்கான முடிவல்ல: மார்க் வுட்

 

இங்கிலாந்து அணி  சுழற்பந்துவீச்சை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாகவும், முதல் டெஸ்ட் பல விஷயங்களை யோசிப்பதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பளித்திருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து 28  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஓவர்களை இங்கிலாந்து அணியின் ஆலி போப் சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடினார். 

இதையும் படிக்க:  இந்த உலகில் எனக்கான நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன்: கார் விபத்து குறித்துப் பேசிய ரிஷப் பந்த்!

இந்த நிலையில், இங்கிலாந்து அணி  சுழற்பந்துவீச்சை எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாகவும், முதல் டெஸ்ட் பல விஷயங்களை யோசிப்பதற்கு இந்திய அணிக்கு வாய்ப்பளித்திருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு எந்த மாதிரியான ஆடுகளத்தை இந்தியா தேர்வு செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. எந்த மாதிரியான ஆடுகளத்தையும் உருவாக்கும் திறன் இந்திய அணிக்கு உள்ளது. அவர்கள் எந்த மாதிரியான ஆடுகளத்தை கொண்டு வந்தாலும் அவர்களுக்கு யோசிப்பதற்கு சில விஷயங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறப் போகிறது என்பது உறுதியான முடிவு இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.