IND vs ENG 1st Test: இந்தியாவின் தொடர் வெற்றிக்கு செக் வைத்த இங்கிலாந்து.. சொந்த மண்ணில் நிகழ்ந்த சோகம்!!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 436 ரன்களை குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில், ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் ஒல்லி போப் 21 பவுண்டரிகள் உட்பட 196 குவித்து அசத்தினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து 420 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கவில்லை. இதனால் 202 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்துள்ளது.
ரத்த வெள்ளத்தில் கிடக்கும் சக்தி.., துடிதுடித்து போன ஜனனி.., அடுத்து கிளம்பிய புது பிரச்சனை.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!
The post IND vs ENG 1st Test: இந்தியாவின் தொடர் வெற்றிக்கு செக் வைத்த இங்கிலாந்து.. சொந்த மண்ணில் நிகழ்ந்த சோகம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


