WI vs AUS Test:: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி., சாதனை வெற்றி!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலிய அணியிடம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி நடந்து முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி கப்பா மைதானத்தில் இரு தினங்களுக்கு முன் தொடங்கியதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பேட்டிங் தேர்வு செய்து 311 ரன்களை சேர்த்தது.

இன்ஸ்டாகிராம் :  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை சேர்த்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. 2வது இன்னிங்ஸில் ஹேசல்வுட் மற்றும் நாதன் லயனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரன்னுக்கு ஆல்-அவுட்டானது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்யப்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலிய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சொந்த மண்ணிலே மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தி உள்ளது

என் அப்பா சங்கியா?? உண்மையை உணர்த்திய ஐஸ்வர்யா., கண்கலங்கி ரஜினிகாந்த்., ரசிகர்கள் நெகிழ்ச்சி!!

The post WI vs AUS Test:: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி., சாதனை வெற்றி!!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.