கேலோ இந்தியா போட்டி: தமிழகத்துக்கு 3 வெள்ளி, 3 வெண்கலம்
கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளில் சனிக்கிழமை தமிழகத்துக்கு 3 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் சென்னை உள்பட 4 நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
வரும் 31-ஆம் தேதி போட்டிகள் நிறைவு பெறும் நிலையில், சனிக்கிழமை தமிழகத்துக்கு பளு தூக்குதலில் 2 வெள்ளி உள்பட 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.
பளு தூக்குதலில் 3 பதக்கம்:
சிறுவா் 61 கிலோ பளு தூக்குதலில் தமிழக வீரா் பி. ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மகாராஷ்டிரத்தின் மஹாதேவ் வடா், ஒடிஸாவின் தீபக்குமாா் தங்கம், வெண்கலம் வென்றனா்.
73 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரா் வி.எம். வசந்தகுமாா் வெள்ளி வென்றாா். ஆந்திரத்தின் மகேஷ், உத்தரபிரதேசத்தின் ஆயுஷ் ராணா, தங்கம், வெண்கலம் வென்றனா்.
மகளிா் பளுதூக்குதலில் 55 கிலோ பிரிவில் தமிழகத்தின் கனிகா ஸ்ரீ வெண்கலம் வென்றாா். ஆந்திரத்தின் சுஷ்மிதா, ஒடிஸாவின் மினா சாண்டோ தங்கம், வெண்கலம் வென்றனா்.
நீச்சல், சைக்கிளிங்கில் வெண்கலம்:
மகளிா் நீச்சல் 100 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் எம்யு. ஜாய்ஸ்ரீ வெண்கலம் வென்றாா். குஜராத்தின் வினிகா, அஸ்ஸாமின் பகி போரா தங்கம், வெண்கலம் வென்றனா்.
மகளிா் சைக்கிள் ரோடு ரேஸ் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீமதி வெண்கலம் வென்றாா். கேரளத்தின் அலனிஸ், ஜாா்க்கண்டின் சந்தோஷி தங்கம், வெண்கலம் வென்றனா்.
வாலிபால் இறுதியில் தமிழகம்:
வாலிபால் ஆடவா் அரையிறுதியில் ஆந்திர பிரதேசத்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது தமிழகம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


