IND vs ENG 1st TEST: இந்திய பவுலர்களுக்கு டஃப் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்…, 126 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தல்!!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு எதிராக விளையாட திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களில் ஆல் அவுட்டாக, இந்திய அணி அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி 190 ரன்கள் முன்னிலை பெற்று 436 ரன்களை குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 87, கே எல் ராகுல் 86 ரன்கள் குவித்திருந்தனர். இதையடுத்து, தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது. இதில், சாங் கிராலி (31), பென் டக்கெட் (47) ரன்கள் எடுத்து அடித்தளம் கொடுக்க ஒல்லி போப் அதிரடியாக விளையாடி சதம் (148*) அடித்து அசத்தினார். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, இங்கிலாந்து அணி இன்று (ஜனவரி 27) 3 ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
The post IND vs ENG 1st TEST: இந்திய பவுலர்களுக்கு டஃப் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்…, 126 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


