புரோ கபடி லீக்: பெங்களூரிடம் கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 45-28 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு நரேந்தர் ஹோஷியார் தான் மிக முக்கிய காரணமாக இருந்தார்.

வாட்ஸ் அப்:  Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் தனது அட்டகாசமான ரெய்டுகளின் மூலம் 14 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் இதுவரை 14 போட்டிகளில் 5 வெற்றி, 9 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பலம் வாய்ந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தமிழ் தலைவாஸ் அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்…, முழு விவரம் உள்ளே!! 

The post புரோ கபடி லீக்: பெங்களூரிடம் கெத்து காட்டிய தமிழ் தலைவாஸ்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.