NZ vs PAK 2024: 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து.. தொடர் தோல்வியால் பாகிஸ்தான் அவதி!!

பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று (ஜனவரி 19) இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 158 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 90 ரன்களும், முகமது நவாஸ் 21 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் டேரில் மிட்செல் (72*) மற்றும் க்ளென் பிலிப்ஸ் (70*) அதிரடியாக விளையாடி, 159 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வைக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

விமான பயணிகளுக்கு ஷாக்., இந்த தேதி வரையிலும் சேவைகள் நிறுத்தம்? மத்திய அரசு அதிரடி!!!

The post NZ vs PAK 2024: 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து.. தொடர் தோல்வியால் பாகிஸ்தான் அவதி!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.