துப்பாக்கி சுடுதலில் வருண் தோமர், ஈஷா சிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ஜகார்த்தா: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர் 239.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றதுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரரான அர்ஜூன் சீமா 237.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் 243.1 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


