மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் அமன் ஷெராவத்

ஜாக்ரெப்: குரோஷியா நாட்டின் தலைநகரான ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. தரவரிசை தொடரான இதில் 57 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத், உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சீனாவின் வான்ஹாவோ சூ உடன் மோதினார். இதில் அமன் ஷெராவத் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக நடைபெற்ற முதல் சுற்றில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள அமன் ஷெராவத் 15-4 என்ற கணக்கில் துருக்கியின் முகமது கரவுஸையும், கால் இறுதி சுற்றில் 11-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் ரிச்சர்ட்ஸ் ஜேன் ரே ரோட்ஸையும், அரை இறுதியில் 11-0 என்ற கணக்கில் ஜார்ஜியாவின் ராபர்டி திங்காஷ்விலியையும் தோற்கடித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.