சோதித்த ஆந்திரா... காத்திருக்கும் இங்கிலாந்து சவால் - ஸ்ரேயஸை விடாமல் துரத்தும் பவுன்சர் பலவீனம்!
ஸ்ரேயஸ் ஐயரின் பலவீனம் ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்சர் பந்துகள் என்பது இப்போது ஊரறிந்த விஷயம். ஆனால் இவரது இந்தப் பலவீனம் தற்போது உள்ளூரிலும் தெரிய ஆரம்பித்து விட்டதுதான் ஸ்ரேயஸின் துரதிர்ஷ்டம். ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஆந்திரா பவுலர்களாலும் பவுன்சர் பந்து சோதனைக்குள்ளாக நேரிட்டது.
தென் ஆப்பிரிக்காவில் இவரை பவுன்சர் பந்துகளில் காலி செய்து அனுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஸ்ரேயஸ் விடுவிக்கப்பட்டு ரஞ்சி டிராபியில் ஆட அனுப்பப்பட்டார். காரணம் இங்கிலாந்து தொடருக்கு இவர் தயாராக வேண்டுமே. இங்கிலாந்து இந்த முறை எத்தகைய குழிப்பிட்சையும் தகர்த்தெறியும் நோக்கத்தோடு கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷார்ட் பிட்ச் பந்து உத்தியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பேட்டர்களையே கவிழ்த்துப் போட்டது இங்கிலாந்து. இப்போது ஸ்விங்கே ஆகாத இந்திய பிட்ச்களில் பந்துகள் தேய்ந்தவுடன் லெக் திசையில் 6 பீல்டர்களை நிறுத்தி ஷார்ட் பிட்ச் உத்தியில் இந்தியாவையும் கவிழ்க்க திட்டமிடுவார்கள் என்று நம்பலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


