பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்
டூனிடின்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய 3 ஆட்டங்களில் இருந்து காயம் காரணமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது ஆட்டம் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டூனிடின் நகரில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

