IND vs AFG 3-வது டி20 | சிக்சர் ஷோவுடன் ‘ஹிட்’மேன் அதிரடி சதம் - ஆப்கனுக்கு 213 ரன்கள் இலக்கு

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா 8 சிக்ஸர்களையும், ரிங்கு சிங் 6 சிக்ஸர்களையும் விளாசி அதிரடி காட்டினர்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 தன்வசப்படுத்தியது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.