புதிதாக சமுர்த்தி நிவாரணம் கோரி 5 இலட்சம் விண்ணப்பங்கள்

Colombo (News 1st) புதிதாக சமுர்த்தி நிவாரணம் கோரி 5 இலட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்துள்ளவர்களின் தகைமை குறித்து ஆராயும் நடவடிக்கை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் இடம்பெறுவதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே. தடல்லகே தெரிவித்துள்ளார். தகைமையுடைய 1,50,000 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது 13 இலட்சத்துக்கும் அதிக குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post புதிதாக சமுர்த்தி நிவாரணம் கோரி 5 இலட்சம் விண்ணப்பங்கள் appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.