ஆஸ்டபென்கோ, லெஹெக்கா வெற்றி
அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்டபென்கோ 2-6, 6-2, 6-4 என்ற செட்களில் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தினார். 7-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா 7-6 (7/1), 4-6, 4-6 என, ஜெர்மனியின் லாரா சிக்மண்டிடம் தோல்வி கண்டார்.
8-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் வெரோனிகா குதர்மிடோவா 6-2, 7-5 என அமெரிக்காவின் அஷ்லின் க்ருகரையும், பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-4, 1-6, 6-3 என ஆஸ்திரேலியாவின் டேலா பிரெஸ்டனையும் வீழ்த்த, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 1-6 என சக நாட்டவரான காட்டெரினா சினியாகோவாவிடமும், அமெரிக்காவின் கிளாரி லியு 4-6, 3-6 என ரஷியாவின் டரியா கசாட்கினாவிடமும் தோல்வி கண்டனர்.
அமெரிக்காவின் டெய்லர் டெளன்செண்ட் 6-3, 7-6 (7/4) என அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை சாய்க்க, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 3-6, 7-6 (10/8), 7-5 என போலந்தின் மெக்தா லினெட்டை வீழ்த்தினார்.
ஆடவர்: இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-1, 6-3 என ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை வென்றார். 8-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக் 6-2, 6-3 என ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் மெக்காபேவை சாய்த்தார்.
இதர ஆட்டங்களில் பிரிட்டனின் டேன் இவான்ஸ் 6-3, 6-4 என ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவையும், இத்தாலியின் லொரென்ùஸா சொனிகோ 7-5, 2-6, 7-6 (11/9) என ஜெர்மனியின் யானிக் ஹன்ஃப்மானையும், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் 6-2, 6-2 என ஆர்ஜென்டீனாவின் ஃபகுன்டோ டியாûஸயும் தோற்கடித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

