தீயாக உடற்பயிற்சி செய்யும் ஹார்திக் பாண்டியா!

 

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் ஏற்பட்டது. அதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து ஹார்திக் விலகினார்.

தொடர்ந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை. 

இதையும் படிக்க:  நம்பர் 8-லிருந்து தொடக்க வீரர்: ஸ்டீவ் ஸ்மித்தின் அபார வளர்ச்சி!

இந்த நிலையில், வரும் ஜனவரி 11 முதல் 17 வரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: 

அதுமட்டுமின்றி, காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்பதால் வருகின்ற ஐபிஎல் தொடரிலும் ஹார்திக் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

 

To new beginnings. Good luck, #CaptainPandya pic.twitter.com/qRH9ABz1PY

— Mumbai Indians (@mipaltan) December 15, 2023

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் ஏலத்துக்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கம்பேக் கொடுப்பதற்காக தீயாக உடற்பயிற்சி செய்து வருகிறார் ஹார்திக் பாண்டியா. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.