மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 17 முதல் தொடங்கவுள்ளது. 

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும்  ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க:  டி20 உலகக் கோப்பையை வெல்ல இவர்கள் அணியில் வேண்டும்: சுரேஷ் ரெய்னா

டெஸ்ட் அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:

டெஸ்ட் அணி

 

Time to welcome the Windies.

Matt Renshaw returns to our mens national squad, with Cam Green named a certain starter for the first Test in Adelaide. pic.twitter.com/cdprTbiiyE

— Cricket Australia (@CricketAus) January 10, 2024

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும்  மிட்செல் ஸ்டார்க். 

ஒருநாள் அணி

 

The World Champs return to white-ball action in Feb!

Steve Smith will headline a squad packed with heroes from our recent triumph in India in a three-match series against @windiescricket. pic.twitter.com/HOtylKk7Ha

— Cricket Australia (@CricketAus) January 10, 2024

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அப்பாட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஷ், மார்னஸ் லபுஷேன், கிளன் மேக்ஸ்வெல், லான்ஸ் மோரிஸ், ஜை ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட்  மற்றும் ஆடம் ஸாம்பா. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.