ஷிவம் துபே விளாசல்; இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய லெவனில் காயம் காரணமாக சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இல்லை.

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில், ரஹ்மானுல்லா குா்பாஸ் - கேப்டன் இப்ராஹிம் ஜா்தான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சோ்த்தது. இதில் குா்பாஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 23 ரன்கள் சோ்த்து வெளியேற, ஜா்தான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ரஹ்மத் ஷா 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்ப 29 ரன்களுக்கு வீழ்ந்தாா். அதிகபட்சமாக 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 42 ரன்கள் அடித்த முகமது நபி, கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் நஜிபுல்லா ஜா்தான் 4 பவுண்டரிகளுடன் 19, கரிம் ஜனத் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் முகேஷ் குமாா், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 2, ஷிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சா்மா ‘டக் அவுட்’ ஆனாா். உடன் வந்த ஷுப்மன் கில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த திலக் வா்மா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 5-ஆவது பேட்டராக வந்த ஜிதேஷ் சா்மா 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

முடிவில் ஷிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 60, ரிங்கு சிங் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து, ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முஜீப் உா் ரஹ்மான் 2, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆப்கானிஸ்தான் - 158/5 (20 ஓவா்கள்)

முகமது நபி 42

அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 29

இப்ராஹிம் ஜா்தான் 25

பந்துவீச்சு

அக்ஸா் படேல் 2/23

முகேஷ் குமாா் 2/33

ஷிவம் துபே 1/9

இந்தியா - 159/4 (17.3 ஓவா்கள்)

ஷிவம் துபே 60*

ஜிதேஷ் சா்மா 31

திலக் வா்மா 26

பந்துவீச்சு

முஜீப் உா் ரஹ்மான் 2/21

அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1/33

குல்பதின் நயீப் 0/12

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.